தமது சுதந்திர தின உரை, 125 கோடி மக்களின் குரலாக ஒலிக்கும் என, பிரதமர் அறிவிப்பு.

தில்லி செங்கோட்டையில் நாளை மறுநாள் தாம் நிகழ்த்தவிருக்கும் சுதந்திர தின உரை, 125 கோடி மக்களின் குரலாக ஒலிக்கும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியிருக்கிறார். தமது உரை என்பது ஒரு தனிப்பட்ட நபரின் உரையாக இருக்கப்போவதில்லை என்றும், நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் ஒருங்கிணைந்த குரலாக அது ஒலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், தனது சுதந்திர தின உரையை செழுமைப்படுத்தவும், நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான கருத்துக்களையும் யோசனைகளையும் தமக்கு அனுப்புமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார். பொதுமக்கள் தங்களது கருத்துக்களை நரேந்திர மோடி ஆப் அல்லது மைகவ்  வலைதளம் மூலமாக தன்னிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் டிவிட்டர் செய்தியில் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Pin It