தமிழகத்தின் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள்  பற்றி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி  ஆய்வு.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள்  பற்றி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி திரு சத்யபிரதா சாஹூ நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்  மற்றும் காவல்துறை  கண்காணிப்பாளர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொள்கிறார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆய்வுக்கூட்டத்தில் தேர்தலுக்கான காவல்துறைத் தலைவரும் பங்கேற்பார்  என்று கூறினார்.

ஒட்டப்பிடாரம்,சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதி  இடைத் தேர்தலுக்கு ஏழு நாட்கள் முன்னதாக வாக்குச்சாவடி சீட்டுகள் வாக்காளர்களின்  இல்லத்திலேயே  வழங்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.இதுதவிர, வாக்குச்சாவடிகளுக்கு 200 மீட்டர்  தொலைவில் அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குச்சாவடி  சீட்டுகள் வழங்க அனுமதிக்கப்படுவர்  என்றும் கூறினார்.

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் அனுமதியின்றி நுழைந்த விவகாரம்  தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு பாலாஜியின்  அறிக்கை, இந்திய  தேர்தல் ஆணையத்தின்  மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

10 வாக்குச்சாவடிகளில்  மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கான தேதி பற்றிய விவரம் இன்னும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Pin It