தமிழகத்தில் உள்ள  கலை மற்றும்  அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி – உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பழகன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும்  அறிவியல் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்டுள்ள 20 சதவீத கூடுதல் இடங்களுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் மாணவர்களைச் சேர்க்கலாம் என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பழகன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இளங்கலை பாடப் பிரிவில் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்களும்,  அரசு உதவிபெறும் கல்லூகளில் 15 சதவீத இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீத இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Pin It