தமிழகத்தில் சிலைக் கடத்தல் வழக்கு – பதில் மனுதாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒருவார காலம் கால அவகாசம்.

தமிழகத்தில் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றிப் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்கில், பதில் மனுதாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒருவார காலம் கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் திரு மகாதேவன், திரு ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட அமர்வு, இன்று இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Pin It