தமிழகத்தில் நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் வரும் திங்கட்கிழமையுடன் முடிவு.

தமிழகத்தில் அடுத்த மாதம்  19 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைகிறது. மனுக்கள்  பரிசீலனை செவ்வாய்க் கிழமை நடைபெறும். மூன்றாம் நாளான நேற்று, அரவக்குறிச்சி தொகுதியில், திமுக வேட்பாளர்  திரு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். ஒட்டப்பிடாரம் தொகுதியில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளிலும் மனுக்களை விலக்கிக் கொள்ள அடுத்த மாதம்  இரண்டாம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர்  பட்டியல் வெளியிடப்படும்.

Pin It