தமிழகம் முழுவதும் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

தமிழகம் முழுவதும் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற இத்தேர்வை பள்ளிகள் வாயிலாகவும், தனித் தேர்வுகளாகவும் சுமார் 8,66,000 மாணவ, மாணவியர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள், அரசுத் தேர்வுத் ;துறையால் இன்று காலை ஒன்பதரை மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களது பள்ளிக்கூடத்தில் அளித்துள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இதுதவிர, அரசுத் தேர்வுத்துறையின் இணைய தளத்திலும், மாணவர் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இந்த ஆண்டும் அதிக மதிப்பெண் பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pin It