தமிழக அரசு, சட்டப் பேரவையில்  நம்பிக்கை  வாக்கெடுப்பு கோர ஆளுநர்  நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட வலியுறுத்தி திமுக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.  

தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டப் பேரவையில்  நம்பிக்கை  வாக்கெடுப்பு கோர ஆளுநர்  நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட வலியுறுத்தி திமுக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளது. நீதிமன்றத்தால்  நியமிக்கப்படும் பார்வையாளர்  கண்காணிப்பில்  வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்  என்று திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின்  சார்பில் தாக்கல்  செய்யப்பட்டுள்ள அம்மனுவில்  கோரப்பட்டுள்ளது. திரு. எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும்  ஆதரவை விலக்கிக் கொள்வதாக அஇஅதிமுகவைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு கடிதம்  அளித்துள்ளதாகவும் அந்த மனுவில்  சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Pin It