தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித், தாமிரபரணி மகாபுஷ்கர விழாவினை இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித், தாமிரபரணி மகாபுஷ்கர விழாவினை இன்று தொடங்கி வைத்தார். பாபநாசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புனித நீராடி மேடைக்கு வந்த அவர், தீர்த்தமாடுதல் பெருவிழா மலரை வெளியிட்டார். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவிற்காக, பாபநாசம் முதல், தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை பக்தர்கள் புனித நீராடுவதற்கு 64 தீர்த்தக் கட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 144 படித்துறைகளும் பக்தர்கள் புனித நீராடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தொpவிக்கிறார்.

Pin It