தமிழ்நாட்டிற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து தரவேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் – மின்துறை அமைச்சர் திரு பி தங்கமணி.

தமிழ்நாட்டிற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து தரவேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்குமாறு மாநில மின்துறை அமைச்சர் திரு பி தங்கமணி, மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர்  கே சிங்கிடம்  கோரியுள்ளார். புதுதில்லியில்  நேற்று மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேசிய திரு தங்கமணி, மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 6,312 மெகா வாட்டில், தற்போது 3, 376 மெகாவாட் மட்டுமே வந்து  கொண்டிருப்பதால், எஞ்சிய மின்சாரத்தை வழங்க  வேண்டும் என்று அவர் கேட்டுக்  கொண்டார்.

முன்னதாக, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலை நேரில்  சந்தித்த அமைச்சர்,  2020- 21-ஆம்  ஆண்டுகளில் தொடங்கவிருக்கும் ஐந்து அனல் மின் திட்டங்களுக்குத் தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தினார். நாள் ஒன்றுக்கு 72,000 மெட்ரிக்  டன் நிலக்கரி தேவைப்படுவதாகக்  குறிப்பிட்ட அமைச்சர், இத்தேவையை சமாளிக்க உடனடியாக நிலக்கரி வழங்க  வேண்டும் என்று கேட்டுக்  கொண்டார்.

Pin It