தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி  அதிகரித்துள்ளதால், அனல்மின் நிலையங்களுக்கான  நிலக்கரிக்  கொள்முதல் குறைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் திரு. தங்கமணி .

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி  அதிகரித்துள்ளதால், அனல்மின் நிலையங்களுக்கான  நிலக்கரிக்  கொள்முதல் குறைக்கப்பட்டுள்ளதாக மாநில மின்சாரத் துறை  அமைச்சர் திரு. தங்கமணி  கூறியிருக்கிறார். நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை, மோகனூர் உள்ளிட்ட இடங்களில், நேற்று  நடைபெற்ற அரசு  நலத்திட்ட  உதவிகளை  வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட  பின்னர்,  செய்தியாளர்களிடம்  பேசிய  அவர், தமிழ்நாடு  மின்சார  வாரியத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில்,  சீரமைப்புப் பணிகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன  என்றார். பணியாளர்கள்  விருப்ப  மாறுதல் இடமாற்றம், இம்மாதம் முதல், ஆன்லைன் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  என்றும் அவர் கூறினார். உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர  வாகனங்கள்  வழங்கும் மாநிலஅரசின்  திட்டத்திற்கு, தமிழகம் முழுவதும் மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது   என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Pin It