தமிழ்நாட்டில் 300 கோடி ரூபாய் செலவில் 2,200 ஏரிகள் தூர் வார மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது—முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ் நாட்டில் 300 கோடி ரூபாய் செலவில் 2,200 ஏரிகளை தூர் வாருவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.  நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மழைநீரை சேமிக்கும் வகையில் குடிமராமத்து திட்டத்தை தொடங்கி  இருப்பதாகவும், முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு ஆயிரத்து 519 ஏரிகளில் இப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.  விரைவில் மேட்டூர் அணையும் தூர் வாரப்படும் என்று கூறிய முதலமைச்சர் மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும் மழை நீரை சேமிக்கும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.  வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக நிதியை பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  அத்திகடவு—அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Pin It