தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – சதித் திட்டம் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி திரு ஏ கே பட்நாயக்  நியமனம்.

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் சதித் திட்டம் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி திரு ஏ கே பட்நாயக்கை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் சிறப்புப் புலாய்வுப் பிரிவு ஆகியவற்றின் இயக்குநர்கள், தில்லி காவல்துறை ஆணையர்  ஆகியோர், விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்புத் தர  வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் முடிவு, தலைமை நீதிபதி மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் குறித்த புலன் விசாரணைக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்று அந்த  நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதி பட்நாயக், தனது விசாரணை அறிக்கையை சீலிட்ட உரையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Pin It