தாய்லாந்து ஒப்பன் உலக பேட்மின்டன் சூப்பர்  500 போட்டி  – பி வி சிந்து, மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

தாய்லாந்து ஒப்பன் உலக பேட்மின்டன் சூப்பர்  500 போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக பதக்க வீராங்கனை பி வி சிந்து, மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுள்ளார். நேற்று பாங்காக்கில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அவர் மலேசியாவின் சோனியா ச்சியாவை நேர்செட்களில் வென்றார். அரையிறுதியில் அவர் இந்தோனேஷியாவின் கிரிகோரியா மாரிஸ்கா டுன்ஜூங்-உடன் மோதுகிறார்.

Pin It