திருத்தியமைக்கப்பட்ட குற்றவியல் சட்டத்திற்கு குடியரசுத்  தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்.

திருத்தியமைக்கப்பட்ட குற்றவியல் சட்டத்திற்கு குடியரசுத்  தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இச்சட்டத்தின் மூலம் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியன் வன்முறை செய்வோருக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. கத்துவா, உன்னாவ் பகுதிகளில் நிகழ்ந்த பாலியல் வன்முறை சம்பவத்தை அடுத்து மத்திய அரசு கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்ததது. இந்த அவசர சட்டத்திற்குப் பதிலாக, குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்பட்டது. திருத்தியமைக்கப்பட்ட குற்றவியல் சட்டம் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pin It