திருப்பூரில்  சாயத் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள்  உயிரிழப்பு.

தமிழ்நாட்டில் திருப்பூரில்  சாயத் தொழிற்சாலை ஒன்றின் கழிவநீர்த் தொட்டியை சுத்தம்  செய்தபோது, விஷ வாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள்  உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் அஸ்ஸாம் மாநிலத்தைச்  சேர்ந்தவர்கள் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். கழிவுநீர்த்  தொட்டியை சுத்தம்  செய்தபோது பாதிக்கப்பட்ட ஒருவரை மீட்க மேலும்  ஆறு பேர் முயன்றபோது இந்த சம்பவம்  நேரிட்டதாகவும், இது தொடர்பாக, அந்த சாயத் தொழிஸ்சாலைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

Pin It