தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 13 லட்சம் ரூபாய் நிவாரண நிதி – முதல்வர் அறிவிப்பு

 

சென்னை கவியரசு கண்ணதாசன் நகரில் தனியாருக்குச் சொந்தமான உணவகத்தில் நேற்று நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்புத் துறை வீரர் ஏகராஜனின் குடும்பத்தினருக்கு 13 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  இதனைத் தெரிவித்துள்ள அவர், அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் சாதாரணமாகக் காயமடைந்தவர்களுக்குத் தலா 25 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரையும் காயமடைந்தவர்களையும் திரு எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த உணவகத்தில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் நேற்று நள்ளிரவு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்தனர்.

Pin It