துருக்கியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் உயிரிழப்பு, 2 பேர் காயம்.

துருக்கியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று  நேரிட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். இஸ்மிரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நாஃப்தா வாயு தொட்டியில் பராமரிப்புப் பணி மேற்கொண்டபோது இந்த விபத்து நேரிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாயுவின் அழுத்தமே இந்த வெடிப்பு சம்பவத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.  இருப்பினும் இந்த வெடிப்பு காரணமாக தீ பரவவில்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Pin It