தேசிய மனித உரிமை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

தேசிய மனித உரிமை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் சென்ற மாதம் வரை மனித உரிமை மீறியதாக 17 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் உத்தரப் பிரதேசத்திலிருந்து அதிகபட்சமாக 39 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 84,527 புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் 77 வழக்குகளும் அடங்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அதிகமாக வழக்கு பதிவு செய்யப்பட்ட முதல் பத்து மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் ஒடிஷா மற்றும் தில்லி மாநிலங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையில் இருந்ததாகவும் ஆணையம் கூறுகிறது.

Pin It