தேர்தலில் பணப்பலத்தைக் கட்டுப்படுத்த, தற்போதைய சட்டங்கள் போதுமானவையாக இல்லை – தலைமைத் தேர்தல் ஆணையர்

தற்போதுள்ள சட்டங்கள், தேர்தலில் பணபலத்தைக் கட்டுப்படுத்தப் போதுமானவையாக இல்லை எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஓ பி ராவத் கூறியுள்ளார்.  புதுதில்லியில், “இந்தியத் தேர்தல் ஜனநாயகம் எதிர்நோக்கும் சவால்கள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பேசிய அவர், தேர்தலில் கருப்புப்பணப் புழக்கம், புள்ளி விவரத் திருட்டு மற்றும் உண்மைக்கு மாறான செய்திகள் வெளியிடுவது போன்றவை தற்போது தேர்தல் நடைமுறைக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன என்றார்.

ஒரு தரப்பினரின் விருப்பத்திற்கேற்பச் செயல்படுவது ஜனநாயகம் அல்ல என்று குறிப்பிட்ட திரு ஓ பி ராவத், துணிச்சல், ஒற்றுமை, அறிவாற்றல்  போன்றவை அருகி வருவதாகக் கூறினார்.

Pin It