நல்லெண்ண அடிப்படையில் மேலும் 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவிப்பு.

நல்லெண்ண அடிப்படையில் மேலும் 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. கடந்த சனியன்று, 360 பேர் அடங்கிய இரண்டாவது குழு இந்தியக் கைதிகளை 4 கட்டமாக விடுவிப்பதாக பாகிஸ்தான் அளித்த உறுதிமொழிக்கிணங்க, அதன் ஓர் அங்கமாக இந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் 7 ஆம் தேதி, முதல் குழுவாக 100 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் 100 மீனவர்கள் இம்மாதம் 22 ஆம் தேதியும், எஞ்சியுள்ள மீனவர்கள், 29 ஆம் தேதியும் விடுவிக்கப்படுவர்.

Pin It