நவீனமயமாக்கப்பட்ட பிலாய் எஃகுத் தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.

பிரதமர் திரு நரேந்திர மோதி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சத்தீஸ்கர் சென்றடைந்தார். நயா ராய்ப்பூரில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை அவர் திறந்து வைத்தார். இந்த நகரத்திற்கான குடிநீர், மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து கண்காணிப்பிற்கு ஏதுவாக இந்தக் கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்த மையத்தைப் பார்வையிட்ட பிரதமர், பின்னர் அங்கிருந்த பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து, நவீனமயமாக்கப்பட்ட பிலாய் எஃகுத் தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிலாய் ;ஐஐடி வளாகத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கிராமப்புற பஞ்சாயத்துக்களுக்கு அதிவிரைவு இணையதள சேவையை வழங்க வகை செய்யும் பாரத்நெட் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தைத் துவக்கி வைத்தார். அதன் பின்னர், பிலாயில், பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

குறைந்த கட்டண விமான சேவையான உதான் திட்டத்தின் கீழ், ஜக்தால்பூர் – ராய்ப்பூர் இடையே விமான சேவையையும் பிலாயில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக அவர் திறந்து வைத்தார்.

 

Pin It