நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர்  கைது செய்தனர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். திரிகோணமலைப் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது சர்வதேச எல்லையை மீறியதாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம்  நாட்டுப்படகில் இவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது கடல் எல்லையை மீறியதாக குற்றம் சாட்டி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக மீனவளத்துறை இணைய இயக்குநர் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டணத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

Pin It