நாடாளுமன்ற நடவடிக்கைகள்

 

மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராம மூர்த்தி

நாடாளுமன்ற முதலீட்டாளர்கள் இந்திய அரசின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நிதிநிலை அறிக்கை 2020-21 விவாதத்திற்கு பதிலளிக்கும் போது தற்போது வங்கிகள் முதலீட்டை வரவேற்கத் தயாராக உள்ளது என்று கூறினார்.  வருகின்ற 2024-25 ஆண்டிற்குள்ளாக ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கட்டமைப்பு துறைகளுக்காக அரசு செலவிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரிகள் வசூலிப்பதில் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதாகவும் 2014-15 ஆண்டில் 2 லட்சம் கோடி டாலர்களாக இருந்த இந்தியப் பொருளாதாரத்தின் அளவு 2.9 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு 2019-20 ஆண்டில் உயர்ந்துள்ளது என உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க நல்லெண்ண நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாகவும், அரசு அதனை பலப்படுத்த தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் நிதியமைச்சர் கூறினார். கொரானா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய அரசு தயார் நிலையில் உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் மக்களவையில் தெரிவித்தார். நிலைமையை அரசு கவனித்து வருவதாகவும் தேவையான எதிர்பார்ப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தினந்தோறும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதுவரையில் 1118 விமான பயணிகள் சோதனைக்குட்படுத்தப்படுள்ளதாகவும் ஹர்ஷ் வர்த்தன் உறுப்பினர்களிடம் தெரிவித்தார். பூகான் மாநிலத்தின் இருந்து இந்தியப் பயணிகளை மீட்டுவந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

கொரானா வைரஸ் கிருமிகளை பரிசோதனை செய்யும் வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளதாகவும், 10 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்ப உறுப்பினர்களுக்கு 5 இலட்சம் வரை காப்பீடு கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் மாநிலங்களவையில்  தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 2020 வரையில் 44,951 சுற்றுலா பயணிகள் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்துவாராவிற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளதாக உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் அறிவித்தார். கடந்த ஜனவரி 2020 வரையில் 35,40,267 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அவையில் தெரிவித்தார். வெளிநாட்டினர் சட்டம் 1946 மற்றும் கடவுச்சீட்டு சட்டம் 1920 ஆகிய சட்டங்களின்படியான தண்டனைகளிலிருந்து குடியுரிமை திருத்த சட்டம் 2019-ன் படி இந்து சீக்கியர்கள், புத்த மதத்தினர் சமணர்கள் பாரிசியர், கிருத்துவர்களுக்கு தேவையான விலக்கு அளிக்கப்படும் என மக்களவை உறுப்பினர்களுக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் உறுதியளித்தார்.

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு 50 மைக்ரான்கலை விட குறைவான நெகிழி பைகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கெளடா மக்களவையில் அறிவித்தார். வருகின்ற 2022 ஆண்டிற்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பைகளின் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கவேண்டியதன் அவசியத்தையும் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோதி உறுப்பினர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

தேசிய சுற்றுலாக் கொள்கையை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். உள்நாட்டு சுற்று பயணிகளையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தவும் வேலைவாய்ப்பை பெருக்கவும், சுற்றுலாத் துறையில் தேவையான முயற்சிகள் எடுக்கபடுவது மிகவும் அவசியம் என்று கூறினால் அது மிகையாகாது.

நாடாளுமன்றம் வருகின்ற மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pin It