நாடாளுமன்ற மற்றும்  சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை.

நாடாளுமன்ற மற்றும்  சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நீதிபதிகள்  திரு. செல்லமேஸ்வர், திரு. அப்துல்  நசீர்  ஆகியோர்  அடங்கிய அமர்வு முன்பு, இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மக்கள்  பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க இந்த நீதிமன்றங்களை அமைப்பது அவசியம்  என்றும் இதுதொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும்  நீதிபதிகள்  அறிவுறுத்தினர்.

மத்திய அரசு சார்பில்  ஆஜரான தலைமை வழக்கறிஞர்  திரு. கே. கே. வேணுகோபால்  இதற்கு ஒப்புக்கொண்டதுடன்,  ஏற்கனவே இதுபோன்ற சில நீதிமன்றங்கள்  அமைக்கப்பட்டு அவை சிறப்பாக செயல்பட்டு இருப்பதாகவும்  குறிப்பிட்டார்.

முன்னதாக,  7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 98 சட்டப்பேரவை உறுப்பினர்களும்  வருமானத்திற்கு அதிகமாக  சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளதாக, மத்திய நேரடி வரிகள்  வாரியம்  உச்சசநீதிமன்றத்தில்  தெரிவித்திருந்தது.

Pin It