நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் பொதுப் பிரிவினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீட்டினால் ஆயிரக்கணக்கான இடங்கள் காத்திருக்கும்  – மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர்.

நாட்டின் உயர்க்கல்வி நிறுவனங்களில் புதிய பிரிவுகளின்படி அடுத்த கல்வியாண்டில் ஆயிரக்கணக்கான இடங்கள் கிடைக்க இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு வழங்கி மோதி அரசு எடுத்த முடிவு புரட்சிகரமானது என்றார். வரும் ஜூன் மாதம் அடுத்த கல்வியாண்டுக்கென நிறுவனங்கள் திறக்கும்போது ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இந்த இடஒதுக்கீட்டிற்கு ஆயிரக்கணக்கான இடங்கள் காத்திருக்கும் என்று  அவர் கூறினார்.

Pin It