நாட்டின் ஒன்றரை லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார மையங்களாகத் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஜே பி நட்டா

நாட்டில் உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2022-ம் ஆண்டுக்குள் சுகாதார மையங்களாக மேம்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில பேசிய அவர், மத்திய அரசின் முன்னோடித் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரும் 23-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாகக் கூறினார். நாட்டில் உள்ள அனைத்து வித சுகாதார நிலையங்களும், சுகாதார மையங்களாகத் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.

 

Pin It