நாட்டின் மக்கள் தொகையை நிலைப்படுத்தும் பிரச்சினைக்கு அரசு முன்னுரிமை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா.

நாட்டின் மக்கள் தொகையை நிலைப்படுத்தும் பிரச்சினைக்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா கூறியிருக்கிறார். வாழ்க்கை சுழற்சிக் கட்டமைப்பு அடிப்படையில்  இந்த நடவடிக்கைகள் அமைந்திருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த கட்டமைப்பு, தாய்-சேய் சுகாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். புதுதில்லியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, ‘மக்கள் தொகையை நிலைப்படுத்துதல், உரிமை மற்றும் கடமைப் பொறுப்பு‘ என்ற தலைப்பிலான பயிலரங்கை அமைச்சர் தொடங்கி வைத்துப் பேசினார்.

Pin It