நாட்டிலேயே வடகிழக்கு  மாநிலங்களுக்காக மட்டும்தான் பிராந்திய சாலை மேம்பாட்டுக்கழகம் செயல்பட்டு வருகிறது – மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்.

நாட்டிலேயே வடகிழக்கு  மாநிலங்களுக்காக மட்டும்தான் பிராந்திய சாலை மேம்பாட்டுக்கழகம் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வேகமான வளர்ச்சிப் பணிகள், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்றும் அமைச்சர் கூறினார். வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளின் வளர்ச்சி குறித்து நேற்று நடைபெற்ற ஒருங்கிணைந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Pin It