நாட்டில் ஆறு விமான நிலையங்களை தனியார் பங்களிப்புடன் நிர்வகிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நாட்டில் ஆறு விமான நிலையங்களை தனியார் பங்களிப்புடன் நிர்வகிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கௌஹாத்தி, திருவனந்தபுரம் மற்றும் மங்களூர் ஆகிய ஆறு விமான நிலையங்களை இதற்காக குத்தகைக்கு விடுவது என புதுதில்லியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டத்துறைத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத், ஆந்திரப்பிரதேசத்தில் மத்திய பழங்குடியின பல்கலைக்கழகத்தைத் தொடங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 

Pin It