நாட்டில் சிறந்த நீர் மேலாண்மை உள்ள மாநிலமாக குஜராத் தேர்வு.

நாட்டில் சிறந்த நீர் மேலாண்மை உள்ள மாநிலமாக குஜராத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நீர் மேலாண்மை குறித்த நித்தி ஆயோக்கின்  குறியீட்டை நீர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டார். இதில் குஜராத்திற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, இப்பட்டியலில் திரிபுரா முதலிடத்தில் உள்ளது. மோசமான நீர் மேலாண்மையைக் கையாளும் மாநிலமாக ஜார்க்கண்ட் பட்டியலிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் தண்ணீர் தேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pin It