நாட்டில் ஜனநாயகத்தை செம்மைபடுத்துவதில் நீதித்துறை முக்கிய பங்காற்ற வேண்டும்–குடியரசு துணை தலைவர் திரு. வெங்கையா நாயுடு

நாட்டில் ஜனநாயகத்தை செம்மைபடுத்துவதில் நீதித்துறை முக்கிய பங்காற்ற வேண்டும் என குடியரசு துணை தலைவர் திரு. வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அலகாபாத் நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய அவர், வழக்குகளை விரைந்து முடிப்பதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.  இணையவழி குற்றங்கள் நீதித்துறையில் புதிய பரிமாணத்தை கொண்டுவந்துள்ளது என்றும் இதற்கு ஏற்றவாறு நேர்த்தியாக வழக்குகளை கையாண்டு தீர்ப்பு வழங்கப்படும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.  மக்கள் நீதிமன்றங்கள் , விரைவு நீதிமன்றங்கள், கிராம நீதிமன்றங்கள் ஆகியவை போல நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.  தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிப்படை தன்மையுடன் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்றும் குடியரசு துணை தலைவர் வலியுறுத்தினார்.

Pin It