நாளேடுகள் நவில்வன.

துபாயில் சிக்கிய 200 இந்தியர்கள்: நாடு திரும்ப ஏற்பாடுதின மலர் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,

துபாய் : வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், கடந்த ஓராண்டாக, ஊதியம் வழங்கப்படாமல், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி தவிக்கும் 200 இந்தியர்களுக்கு, விரைவில் ஊதியம் வழங்கி, அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடந்து வருவதாக, இந்திய துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், 200 பேர், இந்தியாவை சேர்ந்தவர்கள். அதில் பெரும்பாலானவர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில், இந்திய துாதரக அதிகாரிகள் ஈடுபட்டனர்.அவர்கள் பணியாற்றிய நிறுவனத்துடன் பேசி, அவர்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகையை பெற்று தந்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி, அடுத்த வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக, துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Pin It