நாளேடுகள் நவில்வன

தினமலர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பாப்டே நியமனம் என்று செய்தி வெளியிட்டுள்ளது அதில்,

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து வரும் ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் முடிவதை அடுத்து நீதிபதி பாப்டே தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர் ரஞ்சன் கோகாய்.
தற்போது அவர் அயோத்தி விவகார வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 2018 அக்டோபர் 3 ம் தேதி முதல் பதவி வகித்து வரும் கோகாய் பதவி காலம் வரும் நவம்பர் மாதம் 17 ம் தேதி நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் தலைமை நீதிபதியாக எஸ். ஏ.பாப்டே என்பவரை நியமிப்பதாக ரஞ்சன் கோகாய் சட்ட அமைச்சகத்திற்கு எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில் கூறியுள்ளார். பாப்டே சுப்ரீம் கோர்ட்டின் 47 வது நீதிபதியாவார். வரும் நவம்பர் 18 ம் தேதி பொறுப்பேற்க இருப்பதாக கோர்ட் வட்டாரம் தெரிவிக்கிறது. இவர் ஒரு வருடம் 5 மாத காலம் பொறுப்பில் இருப்பார். அதாவது வரும் 2021 ஏப்ரல் மாதம் 23 ம் தேதி வரை பதவி வகிப்பார்.

2.

உணவுப் பங்குகள் மற்றும் பொது விநியோகத்தை அரசாங்கம் புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய அச்சு ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன

அரசாங்கம் உடனடியாக உணவு இருப்பு மற்றும் பொது விநியோகத்தை புதுப்பிக்க வேண்டும் என்று எகனாமிக் டைம்ப்ஸ் நாளேடு தனது தலையங்கத்தில் எழுதியுள்ளது.  மத்திய அரசிடம் தானியங்களின் இருப்பு  செப்டம்பர் மாதத்தில் சுமார் 73.6 மில்லியன் டன்களாக இருந்தன, இது அக்டோபர் மாதத்திற்கான கையிருப்பில் 2.4 மடங்கு அதிகமாகவும், ஜூலை மாதத்திற்கான கையிருப்பை 80% அதிகமாகவும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

குறுவை பயிர்கள் சந்தைக்கு வரும்போது இந்திய உணவுக் கழகத்தின் கொள்முதல் உயரும். அதிக உள்நாட்டு தானிய விலைகள் ஏற்றுமதியை போட்டியற்றதாக ஆக்குகின்றன. ஆனால், சேமிக்கப்பட்ட தானியங்களின் விலை அதிகரிக்கக்கூடும்.

தற்போதைய முறை தற்காலத்திற்கு ஏற்றது கிடையாது.  கையிருப்பை பராமரிக்கும் பொறுப்பை மட்டும் கொண்டிருக்கும் அமைப்பாக, இந்திய உணவுக்கழகம்  மாற்றப்பட வேண்டும். தானிய வர்த்தகத்தை கையாள தனியார் வர்த்தகத்தை அனுமதிக்க வேண்டும். மாநிலங்களால்,  மலிவு விலையில் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வது ஒரு தெரிவாக இருக்கின்றது.

Pin It