நாளேடுகள் நவில்வன.

எஃப்ஏடிஎஃப்ஃபின் கறுப்புப் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் தப்பியுள்ளது குறித்து, இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“பயங்கரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைப் பணிக்குழு, எஃப்ஏடிஎஃப்ஃபின் கறுப்புப் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் தற்போதைக்குத் தப்பியுள்ளது. இது பலருக்கு அதிருப்தியளித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முதன்முதலாக, எஃப்ஏடிஎஃப்ஃபின் பழுப்புநிறப் பட்டியலில் நுழைந்த பாகிஸ்தான், 2015 ஆம் ஆண்டு அப்பட்டியலிலிருந்து விடுபட்டது. அதே சமயம், எஃப்ஏடிஎஃப்ஃபின் விதி மற்றும் நெறிமுறைகள் குறித்து, இந்தியா அதிக கவனம் செலுத்தத் துவங்கியது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு முன்னுரிமை அளிக்கத் துவங்கியதிலிருந்து, பாகிஸ்தானில் எஃப்ஏடிஎஃப் பற்றிய பொது விவாதங்கள் தலை தூக்கின. இந்தியாவின் முயற்சிகளைத் தொடர்ந்து, மீண்டும் 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான், எஃப்ஏடிஎஃப்ஃபின் பழுப்புநிறப் பட்டியலில் இடம் பெற்றது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் பயங்கரவாத நிதித் தடுப்புக்கு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், அந்நாடு, கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

’விண்வெளியில் சகோதரிகள்’ என்று தலைப்பிட்டு, தி ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் கிறிஸ்டினா கோக் மற்றும் ஜெஸிக்கா மேயர் என்ற சகோதரிகள், பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று, விண்வெளியில் முதன்முதலாக நடந்து சென்ற சாதனையைப் படைத்துள்ளனர். இது விண்வெளிப் பயணத்தில் சரித்திரம் படைக்கும் நிகழ்வாகும். பழுதுபட்ட மின்சக்தி கட்டுப்பாட்டு சாதனத்தை மாற்றியமைக்கும் பணியில், இரு சகோதரிகளும் முதன்முதலாக, சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளிவந்த நிகழ்ச்சி, நேரடியாக பூமியில் ஒளிபரப்பப்பட்டது. பெண்கள் மட்டுமே அடங்கிய குழு இவ்வாறு வெண்வெளியில் நடைப் பயணம் மேற்கொள்ள, 7 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப் பட்டிருந்தாலும், அது தற்போதுதான் நிகழ்ந்துள்ளது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It