நாளேடுகள் நவில்வன.

அரிதினும் அரிதான நோய்கள் குறித்து, தினமணி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

”அரிதினும் அரிதான நோய்கள் குறித்த தேசியக் கொள்கையின் மாதிரி வரைவை கடந்த மாதம் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கிறது. புள்ளிவிவரம் திரட்டுதல், நோய்களை அடையாளம் காணுதல், தகவல்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆக்கபூர்வ முடிவுகள் அந்த மாதிரி வரைவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒருமுறை மட்டுமே செலவாகும் அரிதினும் அரிதான நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை வழங்குவதற்கு மாதிரி வரைவு வழிகோலுகிறது.
உலகில் காணப்படும் நோய்களின், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவற்றில் சில நூறு நோய்களையும், அந்த நோய்க்கான காரணங்களையும் மட்டுமே நமது அறிவியல் ஆய்வுகள் அடையாளம் கண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான நோய்களும், நோய்க்கான காரணங்களும், நோய்க்கான அடையாளங்களும் இருந்தாலும்கூட அவை குறித்த அடிப்படைப் புரிதல்கூட இல்லாத அரிச்சுவடி நிலையில்தான் மனித இனம் இன்னும் இருந்து வருகிறது. என்னவென்று சொல்ல முடியாத, அதற்கான காரணம் தெரியாத நோய்களை எப்படி அழைப்பது?
அதுபோன்ற நோய்களை அநாதை நோய்கள் (ஆர்ஃபன் டிஸீஸஸ்) என்று மேலை நாடுகளில் அழைக்கிறார்கள்.”
என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு தக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து, தினத்தந்தி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

டந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட். துணை முதல்–அமைச்சர் தாக்கல் செய்த 10–வது பட்ஜெட். பல ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராக இருந்து பல பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த கே.சண்முகம் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றபிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதோடு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரான எஸ்.கிருஷ்ணன் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இது என்ற பல சிறப்புகளையும் இந்த பட்ஜெட் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அரசு செலவுகளை பொறுத்தமட்டில், பல சீர்த்திருத்தங்களை அரசு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழக அரசில் உள்ள மொத்த பணியாளர் இடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து வருவாய் செலவுகளை குறைப்பதற்கும், எந்தெந்த பணிகளை ‘அவுட்சோர்ஸ்’ என்ற முறையில் வெளியே இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றியும் ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிசே‌ஷய்யா தலைமையில், அரசு ஊழியர் சீர்திருத்தக்குழு கடந்த 2018–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. அப்போது நிதித்துறை செயலாளர் (செலவினம்) ஆக இருந்த எம்.ஏ.சித்திக் இந்த குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். எஸ்.ஆதிசே‌ஷய்யா குழு இப்போது தன் அறிக்கையை முதல்–அமைச்சரிடம் தாக்கல் செய்துவிட்டது. இந்த குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால், வருவாய் பற்றாக்குறை பெருமளவில் குறைந்து, வருவாய் உபரி நிலைமைக்கு மாநிலம் மீண்டும் போக வழிவகுக்கும் என்று அப்போது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It