நாளேடுகள் நவில்வன.

இன்றைய நாளேடு, தங்கத்திற்கு தேவை குறைந்துள்ளது குறித்து தலையங்கம் எழுதியுள்ளது.

தி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், கடந்த ஏப்ரல் மாதத்தில், தங்கம் இறக்குமதி 33 சதம் குறைந்ததால், அரசின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை வரம்புக்குள் வந்துள்ளதை வரவேற்றுள்ளது. 2012 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், தங்கம் இறக்குமதி, சராசரியாக 1.9 சதம் மட்டுமே வருடாந்திர அதிகரிப்பைக் கண்ணுற்றது என, உலக தங்கம் கவுன்சில் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிக்கை கூறுகிறது. தற்போது தங்கம் ஜிஎஸ்டியின் கீழ் வந்துள்ளது என்றும் அப்பத்திரிக்கை கூறுகிறது.

இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் தமிழ் நாளிதழ், வியாழன் கிரகத்தின் நிலவான ஐரோப்பாவில் நீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,

”வியாழன் கிரகத்தின் நிலவான ஐரோப்பாவில் நீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹப்பிள் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மூலம் ஐரோப்பாவின் மேற்பகுதியில் பல கிலோமீற்றர் உயரத்திற்கு பனி அடுக்குகள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் ஐரோப்பா நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள நாசா, இதன் மூலம் பூமியைத் தவிர தண்ணீர் உள்ள மற்றொரு கிரகம் என்றும் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதற்காக ஐரோப்பாவின் மேற்பகுதியில் ரோபோ மூலம் துளையிட்டு ஆய்வு செய்வது சிக்கலான மற்றும் சிரமமான செயல் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.”

என்று கூறியுள்ளது.

Pin It