நாளேடுகள் நவில்வன.

இன்றைய நாளேடு, அமெரிக்க, வடகொரிய அதிபர்களுக்கிடையிலான உச்சிமாநாடு குறித்து தலையங்கம் தீட்டியுள்ளது.

தமிழ் நாளேடு, அடல் பென்ஷன் யோஜனா திட்டம் குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து நாளிதழ், ”வரலாற்றுச் சிறப்புமிக்க கைகுலுக்கல்” என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னுக்கும் இடையே சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாடு, ராஜீய வழிமுறைகளின் சக்தியைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. சில மாதங்கள் முன்பு வரையில் அணு ஆயுத அச்சுறுத்தல்களில் அமிழ்ந்திருந்த இரு நாடுகளும், இந்த உச்சி மாநாட்டில் நேர்மறையான அணுகுமுறையை மேற்கொண்டனர் என்றும், வடகொரியா, கொரிய தீபகற்பத்தை அணுஆயுதங்களற்ற பகுதியாக ஆக்குவதில் தனக்குள்ள உறுதிப்பாட்டை நிலைநிறுத்தியது என்றும், அதற்குப் பிரதியுபகாரமாக, அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உத்தரவாதம் அளித்துள்ளது என்றும் அப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.

தினத்தந்தி நாளிதழ், அடல் பென்சன் யோஜ்னாதிட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயருகிறது”  என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”மத்திய அரசின் ‘அடல் பென்சன் யோஜ்னா’ திட்டத்தில் சந்தாதாராக இணையும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு 60 வயதுக்கு பின்பு 5 அடுக்குகளில் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.5 ஆயிரம் வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டம் 2015–ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது 1.02 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.

பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகை போதுமானதாக இருக்காது என்பதால் இது குறித்து பரிசீலனை செய்யும்படி மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதுபற்றி ஓய்வூதிய நிதி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பெட்ரா) தலைவர் ஹேமந்த் ஜி.கான்டிராக்டர் கூறுகையில், ‘‘அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான பரிந்துரையை நிதி அமைச்சசத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்’’ என்றார்.

இதேபோல் ‘அடல் பென்சன் யோஜ்னா’ திட்டத்திற்கான வயது வரம்பை 18–ல் இருந்து 50 ஆக உயர்த்தவும் பெட்ரா பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை மத்திய நிதிச்சேவை இலாகாவின் இணைச் செயலாளர் மாதேஷ் குமார் மிஸ்ராவும் டெல்லியில் நேற்று உறுதி செய்தார்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

Pin It