நிதி நிறுவனங்கள், வங்கிகளில் பணம் வைத்திருப்போர் நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதி – அருண் ஜேட்லி

உத்தேச நிதி தீர்வுகள் மற்றும் வைப்புக் காப்பீட்டு மசோதா 2017 மூலம் நிதி நிறுவனங்கள்  மற்றும் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் இருப்பதாக நிதியமைச்சர் திரு அருண் ஜேட்லி கூறியுள்ளார். தமது டுவிட்டர் பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ள அவர், இந்த மசோதா  நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கிறது என்றும் இந்த மசோதாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வங்கிகளில் உள்ள வைப்புத் தொகை குறித்து அவற்றை வைத்திருப்போர் அச்சம் தெரிவித்துள்ள நிலையில் நிதியமைச்சர் இதனைக் கூறியுள்ளார். நிதி வைப்புகளை வைத்திருப்போர் உரிமைகளைப்  பாதுகாக்க இந்த மசோதா வழிவகை செய்வதாகப் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் திரு எஸ் சி கார்க் தமது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

Pin It