நிரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோரை, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும் – சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க இயக்ககம் மனுதாக்கல்.

மோசடி செய்து வெளிநாட்டிற்குத் தப்பியோடியுள்ள வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோரை, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும் என்று கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க இயக்ககம் மனுதாக்கல் செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் அவசரச் சட்டத்தின்கீழ், இதற்கான தனித்தனி மனுக்களை இயக்ககம் தாக்கல் செய்துள்ளது.

இவர்களுக்குச் சொந்தமான மூவாயிரத்து 500 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும், இந்த மனுவில் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அமலாக்க இயக்ககம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Pin It