நெல் ஜெயராமன் காலமானார் – தலைவர்கள் அஞ்சலி

அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த திரு நெல் ஜெயராமன் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்குத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் விடுத்துள்ள செய்தியில், விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் ரகங்களைப் பிரபலப்படுத்தி அதன் உற்பத்தியை ஊக்குவித்த ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டுக்கும் வேளாண் துறைக்கும் பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார். திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் திரு முத்தரசன் உட்படத் தலைவர்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். திரு மு க ஸ்டாலின், உணவுத் துறை அமைச்சர் திரு காமராஜ், சென்னையில் ஜெயராமனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெல் ஜெயராமனின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கத்தி மேடு கிராமத்தில் நாளை நண்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Pin It