நேபாளத்தில் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கட்சி     

 

நேபாளத்தில் தங்கள் பொதுக் குறிக்கோளை எட்டுவதற்காக, ஆறு மாதேசி கட்சிகள் ஒன்றிணைந்து வலிமையாக செயல்படும்வகையில் புதிய கட்சியைத்  தொடங்கியிருக்கின்றன.   தராய் மாதேஸ் லோக்தான்த்ரிக், சத்பாவனா, ராஷ்ட்ரிய மாதேஸ் சமாஜ்வாதி, தராய் மாதேஸ் சத்பாவ்னா மற்றும் மாதேஸி ஜனாதிகார் ஃபாரம் கணதந்த்ரிக் ஆகிய கட்சிகள் இணைந்து ராஷ்ட்ரிய ஜன்தா கட்சியாக ஒன்றிணைவதாக காத்மண்டுவில் அறிவித்தன.

பிறகு, நேபாள் சத்பாவனா கட்சியும் இந்தப்  புதிய கட்சியுடன் இணைந்தது.  புதிய கட்சியின் கொடியையும், தேர்தல் சின்னத்தையும் தலைவர்கள் வெளியிட்டனர்.   கூட்டுத் தலைமையின் கீழ் தங்கள் நோக்கத்தை அடையும் வகையில் ராஷ்ட்ரிய ஜன்தா கட்சி செயல்படும்.  இதனிடையில், மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, மாதேஸித் தலைவர்களுக்கு நேபாளப்  பிரதமர் புஷ்ப கமல் தஹல் அழைப்புவிடுத்துள்ளார். மாகாண எல்லைகளை மறுவரையறை செய்வது, அதிக பிரதிநிதித்துவம், குடியுரிமை, மொழி உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளூர் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் அரசியல் சாசனத்தில் திருத்த வேண்டும் என்று மாதேஸித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Pin It