நேபாளத்தில் ஆற்றுக் கரைகளைக் கட்டுவதற்கும், நதிகள் தொடர்பான பயிற்சிக்கும் இந்தியா, 18.07 கோடி நேபாள ரூபாய் மானியம்.

நேபாளத்தில் ஆற்றுக் கரைகளைக் கட்டுவதற்கும், நதிகள் தொடர்பான பயிற்சிக்கும் என இந்தியா 18.07 கோடி நேபாள ரூபாய் மானியத்தை வழங்கி உள்ளது. நேபாளத்தில் உள்ள  இந்தியத் தூதர் திரு மஞ்ஜீவ் சிங் பூரி இந்தத் தொகைக்கான காசோலையை காத்மாண்டுவில் நேபாள நாட்டின் மின்சாரம் மற்றும் நீர் ஆதாரங்கள் துறை செயலாளர் டாக்டர் சஞ்சய் சர்மாவிடம் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் நேபாள மின்சாரம், நீர் ஆதாரங்கள் துறை அமைச்சர் திரு வர்ஷாமான் புன் உடனிருந்தார்.

லால்பாக்கியா, பாக்மதி, கம்லா நதிகளின் கரைகள் அமைப்பதற்கும், நதிகள் பயிற்சிக்கும் வழங்கப்படும் இந்த உதவியின்  மூலம், நேபாளத்திலும் இந்தியாவிலும் இந்நதிகளால் பாசனவசதி பெறும் பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். 2008 ஆம் ஆண்டு முதல் இப்பணிகளுக்கு என இந்திய அரசு 468 கோடி நேபாள ரூபாய்களை வழங்கியுள்ளது.

Pin It