நேபாள குடியரசுத் தலைவராக திருமதி வித்யா தேவி பண்டாரி மீண்டும் தேர்வு.

நேபாளத்தில் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் திருமதி வித்யா தேவி பண்டாரி இரண்டாவது முறை அந்தப் பதவிக்கு மிகப்பெரும் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இடதுசாரி கூட்டணியின் வேட்பாளரான 56 வயது திருமதி பண்டாரி மூன்றில் இரண்டு  பங்கு வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நேபாளி காங்கிரஸ் வேட்பாளர் குமார் லஷ்மி ராய் -ஐ தோற்கடித்தார்.

திருமதி பண்டாரிக்கு 39 ஆயிரத்து 275 வாக்குகள் கிடைத்ததாகவும் நேபாளி காங்கிரஸ் வேட்பாளர் ராய்-க்கு 11 ஆயிரத்து 730 வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் திரு நவராஜ் டாக்கல் தெரிவித்தார்.  திருமதி பண்டாரி 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் முதலாவது பெண் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Pin It