நேபாளம்: குர்ஜா சிகரத்தின் அடிவார முகாமிலிருந்து மலை ஏறும் குழுவை மீட்கும் பணி, இன்று மீண்டும் தொடங்க உள்ளது.

நேபாளத்தில், குர்ஜா சிகரத்தின் அடிவார முகாமிலிருந்து மலை ஏறும் குழுவை சேர்ந்த எட்டு பேரை மீட்கும் பணி, இன்று மீண்டும் தொடங்க உள்ளது. மோசமான வானிலை மற்றும் பனிக்காற்றின் காரணத்தினால், நேற்று அங்கு ஹெலிகாப்டர் செல்ல முடியவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வீசிய கடும் பனிப்புயலால், அங்கு முகாமிட்டிருந்த கொரியா நாட்டை சேர்ந்த ஐந்து பேரும் நேபாள நாட்டை சேர்ந்த 3 பேரும் உயிரிழந்ததாக எமது நிருபர் தெரிவிக்கிறார். எட்டு பேரி சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் நேபாள நாட்டை சேர்ந்த வழிகாட்டி ஒருவரை இதுவரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. 7193 மீட்டர் உயரம் கொண்ட குர்ஜா சிகரத்தின் அடிவாரத்தில் இந்த 9 பேரும் தங்கியிருந்தார்கள். வானிலை சீரடைந்த பிறகு சிகரத்தின் மீது ஏறுவதற்காக, இவர்கள் அனைவரும் காத்திருந்தனர். இந்த சிகரம், உலகின் ஏழாவது உயர்ந்த சிகரமான தௌலாகிரி என்று சிகரத்திற்கு அடுத்து அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It