பங்களாதேஷில்  அடுத்த மாதம் 23ஆம் தேதி, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்.

பங்களாதேஷில்  அடுத்த மாதம் 23ஆம் தேதி, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், அன்றே மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார். மனுக்களை வாபஸ்பெற 29ஆம் தேதி கடைசி நாள் என்று கூறிய அவர், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Pin It