பங்களாதேஷில் பேரணியில் தாக்குதல் நடத்திய வழக்கில் 19 பேருக்கு மரண தண்டனை.

பங்களாதேஷில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரணியில் தாக்குதல் நடத்திய வழக்கில் 19 பேருக்கு மரண தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பங்களாதேஷ் தேசிய கட்சியைச் சேர்ந்த அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் மற்றும் துணை அமைச்சரும் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவர். அக்கட்சியின் தற்போதைய தலைவர் தாரிக் ரெஹ்மானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அவாமி லீக் கட்சி நடத்திய பேரணியில், நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

Pin It