பணமதிப்பு விலக்கலுக்குப் பின் அமைப்புக்குள் வந்த கருப்புப் பணம் குறித்த தகவல் வெளியிட ரிசர்வ் வங்கிக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கோரிக்கை

மத்திய அரசின் பணவிலக்க நடவடிக்கைகளுக்கு பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் அமைப்பிற்குள் வந்துள்ள கருப்புப் பணம் குறித்த தகவல்களை மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து, நாடாளுமன்ற நிலைக்குழு கோரியுள்ளது. டி. சுப்பராமி ரெட்டி தலைமையிலான 15 உறுப்பினர்கள் கொண்ட துணைச் சட்டத்திற்கான நாடாளுமன்றக் குழு, நேற்று மும்பையில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களைச் சந்தித்துப் பேசியது. அப்போது,  மத்திய அரசின் பணவிலக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு வங்கிகளில்  செலுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் அமைப்பிற்குள் வந்துள்ள கருப்புப் பணம் குறித்த தகவல்களைச் சமர்பிக்குமாறு நடாளுமன்றக் குழு கேட்டுக்கொண்டது.

Pin It