பணம் செலுத்தி செய்தி வெளியிட்டதாக காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்.

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் தேர்தல்களின்போது பணம் செலுத்தி செய்தி வெளியிட்டதாக காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி மீது, கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது. தில்லி தேர்தல் ஆணையத்தில் பாஜக தலைவர்கள் திரு ஜே பி நட்டா மற்றும் திரு முக்தார் அப்பாஸ் நக்வி, ஆகியோர் இதற்கான புகாரை வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு நக்வி, ஹைதராபாத்தைச் சேர்ந்த செய்தித் தாள் ஒன்றுக்கு தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு, திரு ராகுல் காந்தி, தமது கட்சி வெற்றி பெறும் என்று பேட்டி அளித்ததாகக் கூறினார். இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என்றும்  அவர் தெரிவித்தார்.

Pin It