பனாமா ஆவணக்கசிவு – நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் மீது விசாரணை     

 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் மீதான சட்டவிரோத பணப்பறிமாற்றக் குற்றச்சாட்டை விசாரிக்க கூட்டு புலனாய்வுக் குழு ஒன்றை, ஒரு வாரத்திற்குள் அமைக்கவேண்டுமென்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 3-2 என்ற விகிதத்தில் வந்ததையடுத்து நவாஸ் ஷெரிப்பின் பதவி இன்று தப்பியது. Federal புலனாய்வு முகமை, தேசிய பொறுப்பேற்பு அமைப்பு, பாகிஸ்தான் பங்கு பரிவர்த்தனை கமிஷன், மற்றும் ராணுவ புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகளை கொண்ட  கூட்டு விசாரணைக் குழுவின் முன் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் மற்றும் அவரது மகன்கள் ஹசன் மற்றும் ஹுசேன் ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1990 களில் நவாஸ் ஷெரிப் பிரதமராக பணியாற்றிய போது லண்டனில் சொத்துக்களை வாங்குவதற்காக சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக இவர் மீது  வழக்கு தொடரப்பட்டது. பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது  பிள்ளைகள்  பற்றி வெளியான பனாமா  ஆவணங்கள் மூலம் இந்த சொத்து விவரங்கள் வெளியாகியது.

Pin It