பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய வரைமுறை – ஐ.நா. துவக்கம்.

ஐ.நா. தலைமைச் செயலர் ஆண்டோனியோ குட்டரெஸ் அவர்கள், சர்வதேச பயங்கரவாதத்தை முறியடிக்க புதிய வரைமுறையைத் துவக்கியுள்ளார். இதன்மூலம், சர்வதேச அளவில் அமைதி, பாதுகாப்பு, மனிதாபிமானம், மனித உரிமைகள் மற்றும் நீடித்த வளர்ச்சித் துறைகளில் புதிய வரைமுறை உருவாக்கப்படும். ஐ.நா.உலக பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பு அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், ஐ.நா.தலைவர், 36 நிறுவனங்கள், இன்டெர்போல் மற்றும் உலக சுங்க வரி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐ.நா.வின் பயங்கரவாத எதிர்ப்பு செயல் பணிக்குழுவுக்குப் பதிலாக, இந்தப் புதிய வரைமுறை அமலுக்கு வரும்.

Pin It